ஜனாதிபதி மகிந்த மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது.. அதற்கெதிராக நானே நீதிமன்றில் ஆஜராவேன்! - சரத் என். சில்வா
sireku
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்காக தேர்தலில் குதித்தால் இலங்கைப் பிரஜையெனும் அடிப்படையில் நானே அடிப்படை உரிமை வழக்குத் தொடர்ந்து நீதிமன்றில் ஆஜராகி வாதாடுவேன் என முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.
18 ஆவது சட்டத் திருத்த்த்தின் அடிப்படையில் ஜனாதிபதி மீண்டும் போட்டியிடலாம் என எண்ணிக் கொண்டிருப்பினும் அந்த சட்டமூலம்நல்லெண்ணத்தில் திருத்தபடவில்லை எனும் உண்மை ஒரு புறமிருக்க, அரசியல் யாப்பின் 31 (2) வது பிரிவின்படி அவர் மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக வரமுடியாது என்றும் அவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் தானே வழக்குத் தொடரப் போவதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அடிப்படை உரிமை வழக்கை விசாரித்தே ஆக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து சக்திகளும் இன, மொழி பேதமின்றி மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதிப் பதவியில் அமர்வதை எதிர்த்து வரும் நிலையில், உலகில் கடைப்பிடிக்கப்படும் ஜனநாயக விதிகளை மீறி ஒரே நபர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதியாக வரக்கூடிய வகையில் 18 ஆவது சட்டமூல திருத்த்த்தினை வெற்றி பெறச் செய்தது தாமே என அண்மைக்காலம் வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெருமை பேசிவந்ததும் அதற்காக தற்போது தாம் வரலாற்றுத் தவறிழைத்ததாக சொல்லிவருவதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
(கேஎப்).ilankainet.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்காக தேர்தலில் குதித்தால் இலங்கைப் பிரஜையெனும் அடிப்படையில் நானே அடிப்படை உரிமை வழக்குத் தொடர்ந்து நீதிமன்றில் ஆஜராகி வாதாடுவேன் என முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.18 ஆவது சட்டத் திருத்த்த்தின் அடிப்படையில் ஜனாதிபதி மீண்டும் போட்டியிடலாம் என எண்ணிக் கொண்டிருப்பினும் அந்த சட்டமூலம்நல்லெண்ணத்தில் திருத்தபடவில்லை எனும் உண்மை ஒரு புறமிருக்க, அரசியல் யாப்பின் 31 (2) வது பிரிவின்படி அவர் மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக வரமுடியாது என்றும் அவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் தானே வழக்குத் தொடரப் போவதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அடிப்படை உரிமை வழக்கை விசாரித்தே ஆக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments