sireku


திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த சமுர்த்தி உத்தியோகத்தர் தம்பலகாமம் கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, தம்பலகாமம் பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...