sireku

கந்தளாய் – 91 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கடற்படையினருக்குச் சொந்தமான பஸ்சொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடற்படையின் பஸ்சொன்றும், நேரெதிரே வந்த முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்தில் காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...