sirek


தம்பலாகமபிரதசத்தில் புஹாரி நகர் பள்ளிவாசல் முன்னால் கண்டி-திருகோணாமலை நெடுஞ்சாலையில்,  நேற்று (2014,08, 24) இரவு இசாத் தொழுகையின்பின் இடம்பெற்றுள்ள  விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

புஹாரி நகர் பள்ளிவாசல் முன்  உள்ள மஞ்சள் கோட்டு பாதசாரிக் கடவையில் வீதியைக் கடந்துகொண்டிருந்தபோது வேக­மாக வந்த கார் அவர் மீது மோதியுள்ளது.

இந்த நிலையில், குறித்த இடத்தில் பதற்றம் அதிகரிக்கவே உடனடியாக பொலிஸார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்க்ள்.