திருகோணமலை: 177 வருடங்கள் பழமை வாய்ந்த ஜும்ஆப் பள்ளிவாசல் இராணுவத்தால் உடைப்பு?
sireku
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெள்ளைமணல் கருமலையூற்று ஜும்ஆப் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டுள்ளதாக சீனக் குடா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஊர்முக்கியஸ்தர்களும் இணைந்து இன்று ஞாயிற்றுக் கிழமை இம்முறைப்பாட்டை செய்துள்ளனர்.
சுமார் 177 வருடங்களுக்கு முன்பு 1837ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாக கூறப்படும் இப்பள்ளிவாசல் R/854/T/47 ஆம் அரசாங்க பதிவிலக்கத்தையும் கொண்டமைந்திருந்தது.
கருமலையூற்று கிராமத்தில் முஸ்லிம் மக்கள் மிகநீண்ட காலமாக வசித்து வந்த நிலையில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் தம்வசப்படுத்தியிருந்தனர். யுத்த நிறைவின் பின்னர் கிராமத்தில் ஒரு பகுதியில் மக்கள் மீளக்குடியமர்ந்த போதும் குறித்த பள்ளிவாசலைப் பயன்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை.
இதேவேளை இன்று பாதுகாப்பு படையினர் குறித்த பள்ளிவாசலை தகர்த்துவிட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.(www.sonakar.com/?p=22875)
0 Comments