வாய் திறந்தார் நவி.பிள்ளை; இஸ்ரேலுக்கு எதிராக “போர்க்குற்ற” எச்சரிக்கை!!
sireku
காஸாவிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை தடுப்பதற்கான நடவடிக்கை எனும் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை பொது மக்களைப் பாதுகாக்கும் வகையில் அமையவில்லை என்பதால் இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவி.பிள்ளை இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்கு ஹமாசையும் கண்டித்து விளக்கமளித்துள்ளார்.
எனினும் இதற்கு உடனடியாக பதிலளித்துள்ள இஸ்ரேலிய நீதியமைச்சர் சிபி லிவ்னி, ஐ.நா மனித உரிமைகள் பேரவை இஸ்ரேலுக்கு எதிரான ஒரு அமைப்பு எனவும் ஐ.நா அங்கீகரித்தாலும் கூட எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க மாட்டோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 8ம் திகதி முதல் இடம்பெற்று வரும் ஐ.நா தாக்குதல்களினால் இதுவரை 650 பலஸ்தீனர்கள், பெரும்பாலும் பொது மக்கள் உயிரிழந்துள்ள அதேவேளை இஸ்ரேலிய தரப்பில் இரு சிவிலியன்கள் உட்பட 29 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments