sireku



ஹோமாகம, இல 65B, கட்டுவான வீதியில் அமைந்திருக்கும் “வேர்ல்ட் லவர்ஸ்” எனும் முஸ்லிம் வர்த்தகரான பேருவளையைச் சேர்ந்த சினான் ஹாஜியார் என்பவருக்குச் சொந்தமான வியாபார நிலையத்தின் மேல் மாடி இன்று அதிகாலை விசமிகளால் எரியூட்டப்பட்டுள்ளது.
குறித்த வியாபார நிலையம் ஆரம்பிக்கப்படும் போதே அங்கு இனவாதிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கட்டிட உரிமையாளரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்ததனால் வியாபாரம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ள பணியாளர்கள், குறித்த நிலையத்துக்கு அருகில் ஹோட்டல் நடாத்தும் சிங்கள வர்த்தகரே அதிகாலை 4 மணியளவில் வர்த்தக நிலையத்தின் கீழ் பகுதி கண்ணாடிகள் உடைந்திருப்பது கண்டு திருடன் வந்திருக்கலாம் என தமக்கு தகவல் வழங்கியதாகவும், அதன் பின் அங்கு விரைந்த போது, மேல் மாடியில் பைப் லைன் வழியாக பெற்றோல் ஊற்றப்பட்டு எரியூட்டப்பட்டிருந்ததாகவும் தகவல் வழங்கியுள்ளனர்.
வர்த்தக நிலைய உரிமையாளர் தற்போது உம்ராவுக்காக சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை 30-40 லட்ச ரூபா இழப்பு கணிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(sonakar.com)