sireku

David Ward
நான் காஸாவில் இருந்திருந்தால் இஸ்ரேலிய அராஜகத்துக்கு எதிராக நானும் ஏவுகணைத் தாக்குதல் நடாத்தியிருப்பேன் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் வாட் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்த கருத்து பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ஆளுங்கூட்டணி கட்சியான லிபரல் டெமக்ரட்டைச் சேர்ந்த அவரது கட்சி கண்டனம் வெளியிட்டுள்ள போதும் தனது கருத்தை மீளப்பெறவோ மன்னிப்பு கேட்கவோ மாட்டேன் என அவர் தெரிவித்துள்ள நிலையில் இவ்விவகாரம் பேசுபொருளாக மாறிவருகிறது.
இது குறித்து மேலதிக கருத்து வெளியிட்டுள்ள அவர், தனது கருத்தில் எந்த பிழையும் இல்லையெனவும் காஸா மக்களின் உண்மையான மன நிலை என்ன? அவர்கள் ஏன் ஏவுகணைகளை ஏவ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டதன் வெளிப்பாடுதான் அது என வலியுறுத்தியுள்ளமையும் தனது கருத்து எதிர்மறையாகப் பார்க்கப்படின் அதற்காக வருத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..sonakar.com

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...