காசாவில் இஸ்ரேல் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையை அரங்கேற்ற முயற்சி – துர்கி பிரதமர்
sireku
காசாவில் இஸ்ரேல் தரை வழி தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், காசா மீதான இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பை கண்டித்துள்ள துர்கி பிரதமர் ரஜப் தய்யுப் அர்தூகான், காசாவில் இஸ்ரேல் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையை அரங்கேற்ற முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
ஏற்கனவே, காசாவில் அப்பாவி குடிமக்கள் மீது “உத்தியோகபூர்வ பயங்கரவாத” தாக்குதல் நடாத்திவருவதாக இஸ்ரேல் மீது குற்றம் சுமத்தி இருந்த அர்தூகான் “பாலஸ்தீனத்தில் இடம்பெறும் படுகொலைகள்” தொடர்ப்பில் சர்வதேசம் அமைதி காப்பதையிட்டு தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனி நபர் பயங்கரவாத்தையும் மீறி அரச பயங்கரவாதமாக இஸ்ரேலின் செயற்பாடுகள் மாறிவிட்டது. எனவே இஸ்ரேலின் செயற்பாடுகளை எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது என்று மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்படி இஸ்ரேலின் அரச பயங்கரவாதத்திற்கு முன் எவ்வளவு காலம் தான் உலகம் அமைதி காக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள அர்தூகான், காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடர்கிற நிலையிலும், பல்லாண்டு காலமாக காசா மீது அநியாயமாக திணிக்கப்பட்டுள்ள முற்றுகை அகற்றப்படாத வரையிலும் தனது நாட்டிற்கும், இஸ்ரேலுக்கும் இடையே எந்த உறவும் சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
0 Comments