sireku

“ஓ….. பலஸ்தீனத்தின் வீர மைந்தர்களே. யூத காட்டுமிராண்டிகள் எம் மக்களை படுகொலை செய்ய தயாராகி விட்டார்கள். அதனை தடுக்க நாம் எம் உயிரையும் விட தயாராகி விட்டோம். எமது போராளிகள் இஸ்ரேலை நோக்க ரொக்கெட் தாக்குதல்களை சளைக்காமல் நடாத்துகிறார்கள். ஒவ்வொரு ரொக்கெட்டும் இஸ்ரேலை நோக்கி பாயும் போது நீங்கள் அடையும் மகிழ்ச்சியை நாம் அறிவோம். ..”
“ஆனால்……….. உங்கள் மகிழ்ச்சி இப்போது எமக்கு பிரச்சனைகைளை உண்டு பண்ணுவதாக அமைகிறது. எமது புனிதப்போராளிகள் மேற்கொள்ளும் தாக்குதல் நிலைகள், அவற்றில் பாவிக்கப்படும் எறிகணைகள், தாக்குதலை மேற்கொள்ளும் எமது போராளிகள், நாம் நகர்த்தி செல்லும் ஆயுதங்களை சுமந்து செல்லும் வாகனங்கள் போன்றவற்றை நீங்கள் புகைப்படம் எடுக்கிறீர்கள். அதனை மீண்டும் வெளியிடுகிறீர்கள். இதனால் எதிரி எமக்கு இலக்குகளை உடனடியாகவே இனம் கண்டு கொண்டு அந்த இடத்தை நோக்கி தாக்குதல் நடாத்துகிறான். அவர்களின் விமானங்களும் ஆட்டிலறிகளும் குறித்த இலக்கை நோக்கி துல்லியமாக பதில் தாக்குதல் நடாத்துகின்றன…”
“இதன் பின்னர் காஸாவில் யாரும் புகைப்படம் எடுப்பதை நாம் தடை செய்கின்றோம். அவர்களது ராடர்கள் மூலம் எம்மை கண்டு பிடித்து இலக்கை அழிக்க முற்படுவது வேறு விடயம். நாம் எறிகணைகளை ஏவிவிட்டு நகர்ந்து செல்லும் பாதைகளை நீங்கள் எடுத்து வெளியிடும் புகைப்படங்களால் அவர்கள் இலகுவாக அனுமானம் செய்கிறார்கள். இதனை தவிர்த்து கொள்ளுங்கள். இதனை மற்றையவர்களிற்கும் தெரியப்படுத்துங்கள்…”
“நாம் தாக்குதல் நடாத்தும் இடங்களை நீங்கள் அறிந்து கொண்டால் அங்கு குழுமாதீர்கள். அல்லாஹு அக்பர் கோசமெழுப்பி முழங்காதீர்கள். எதிரியின் பதில் தாக்குதல் அடுத்த நிமிடம் அந்த இடத்தை நோக்கி நடாத்தப்படுகிறது. அதில் அநியாயமாக உங்களில் பலர் பலியாகியதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரிவிலேயே யூதர்களிற்கு எதிரான எமது வெற்றி தங்கியுள்ளது. ”

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...