ஹமாஸின் தாக்குதலில் 29 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் பலி !!
sireku
தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தியுள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை வீரர்களுக்கு எதிராக ஹமாஸ் போராளிகள் பாதுகாப்பு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தாம் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 29 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக ஹமாஸின் இராணுவப் பிரிவான “அல் கஸ்ஸாம்’ படையணி அறிவித்துள்ளது.
இஸ்ரேல் காஸா மீது தரை வழி தாக்குதலை ஆரம்பித்ததிலிருந்து இது வரைக்கும், ஒரே ஒரு ஹமாஸ் படைவீரர் மாத்திரமே ஷஹீதாகி உள்ளதாக ஹமாஸ் மேலும் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பழிவாங்கும் நோக்கில் பொதுமக்களையே தாக்கி வருகிறது.
இஸ்ரேல் தரைவழியாக தம்மை தாக்க முனைந்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஹமாஸ் இஸ்ரேலை எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இஸ்ரேலின் வான் தாக்குதல் தொடர்ப்பில் மௌனம் காத்த அமெரிக்கா, தரை மார்க்க தாக்குதலை தவிர்க்குமாறு இஸ்ரேலை கோரியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
0 Comments