ஹமாஸ் 24 மணி நேர யுத்த நிறுத்த பிரகடனம் : இஸ்ரேல் நிராகரிப்பு !
sireku
நேற்று மாலை இஸ்ரேலினால் அறிவிக்கப்பட்டிருந்த யுத்த நிறுத்தத்தை ஹமாஸ் நிராகரிப்பதாக தெரிவித்திருந்த நிலையில் தாக்குதல்கள் துளிர்விட ஆரம்பித்திருந்தன.
எனினும், பின்னர் ஹமாஸ் தரப்பு தாமும் 24 மணி நேர யுத்த நிறுத்தத்திற்கு தயார் என அறிவித்திருக்கும் நிலையில் ஹமாஸ் வாய்ப்பைத் தவறிவிட்டதாகக் கூறி தாம் நிராகரிப்பதாக அறிவித்துள்ள இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்வதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 19 நாட்கள் யுத்தத்தினால் இதுவரை 2 லட்சம் பேர் வரை இடம்பெயர்ந்து ஐ.நா முகாம்களில் தஞ்சமடைந்திருக்கும் நிலையில் பலஸ்தீன தரப்பில் 1060 பேர், பெரும்பாலும் குழந்தைகளும் பொதுமக்களும் கொல்லப்பட்டிருப்பதும் இஸ்ரேலிய தரப்பில் தாய்லாந்து பிரஜையொருவர் உட்பட மூன்று சிவிலியன்களும் 43 இராணுவத்தினரும் உயிரிழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(http://www.sonakar.com/?p=21950)
0 Comments