sireku


மோட்டார் வண்டியில் சென்ற இளைஞர்கள் மீது நேற்று இரவு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

பசியாலை பிரதேசத்தில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச்சென்றவர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
எனினும், மோட்டார் வண்டியை தாம் நிறுத்தியதன் பின்னரே பொலிஸார் தனது நண்பன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞனின் நண்பன் தெரிவித்துள்ளார்.

தாம் தப்பிச் செல்ல முயன்றவேளை பொலிஸார் தனது நண்பனை சுட்டுக் கொன்றதாக யாரேனும் கேட்டால் சொல்ல வேண்டும் என பொலிஸார் எச்சரித்ததாக அந்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்றவேளை ஐந்து பொலிஸார் மதுபோதையில் இருந்ததாகவும் அந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.
மோட்டார் வண்டியில் சென்ற இளைஞன் மோட்டார் வண்டியை நிறுத்தாது தப்பிச் சென்றவேளை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்க பொலிஸார் முயற்சிப்பதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்தார்.

தனது மகன் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றவேளை, முறைப்பாடு செய்ய தேவையில்லை என பொலிஸார் தெரிவித்ததாக உயிரிழந்த இளைஞனின் தந்தை குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தின்போது மோட்டார் வண்டியில் சென்ற பிறிதொரு இளைஞன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...