ஆப்கன் மண்சரிவில் பலியானோருக்காக தேசிய துக்கதினம்..!!
sireku
ஆப்கானிஸ்தானில் பெரும் மண்சரிவு ஒன்றில் கடந்த வெள்ளியன்று கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்காக ஒரு நாள் தேசிய துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்தப் பிரதேசமே பெரும் புதைகுழிப் பிரதேசமாகக் கருதப்படுவதால் மீட்புப்பணிகளைக் கைவிடுவதாக சனிக்கிழமை அதிகாரிகள் அறிவித்தனர்.புதையுண்ட மக்களை மீட்கச் சென்ற மேலும் 600 பேரும் இரண்டாவது மண்சரிவில் சிக்கி காணாமல்போயுள்ளனர்.

குடியிருப்புகளின் மீது மலைப்பகுதியொன்று சரிந்துவிழுந்ததில் பாறைகள் மற்றும் சேற்றுமண் மேடுகளால் புதையுண்டுபோன குறைந்தது 2000 பேர் தொடர்பில் நம்பிக்கை இழந்துவிட்டதாக வடகிழக்கு மாநிலமான பதாக்ஷானின் ஆளுநர் தெரிவித்தார்.
அந்தப் பிரதேசமே பெரும் புதைகுழிப் பிரதேசமாகக் கருதப்படுவதால் மீட்புப்பணிகளைக் கைவிடுவதாக சனிக்கிழமை அதிகாரிகள் அறிவித்தனர்.புதையுண்ட மக்களை மீட்கச் சென்ற மேலும் 600 பேரும் இரண்டாவது மண்சரிவில் சிக்கி காணாமல்போயுள்ளனர்.
உயிர்தப்பிய மக்கள் வெட்டவெளி மலைப்பிரதேசமொன்றில் இரண்டாவது இரவையும் கழித்துள்ளனர்.வேறெங்காவது தம்மை மீளக்குடியமர்த்துமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 Comments