மின்னல் தாக்குதலுக்கு இலக்கான நான்கு பேர்கள் ;கிண்ணியா தள வைத்தியசாலையில்
sireku
கிண்ணியா பிரதேசத்தின் நடுத்தீவு கிராமத்தில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 7 மணியளவில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, பிள்ளை, மனைவியின் தங்கை ஆகியோரே பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டுக்குள் மின் உபகரணங்களை பாவித்துக்கொண்டிருந்தவேளையில் மின்சார மின் மானியை மின்னல் தாக்கியதனாலேயே வீட்டினுள் இருந்த நான்கு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்னல் தாக்குதலுக்கு இலக்கான நான்கு பேர்களுள் ஒருவருக்கு (கணவனுக்கு) அதிக தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன் ஏனைய மூவரும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 Comments