முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவில்லை :பௌத்த சாசன பிரதி அமைச்சர்
sireku
நாட்டில் மத முரண்பாடுகள் கிடையாது, நாட்டில் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவில்லை , நாட்டில் மத முரண்பாடுகள் தொடர்பில் யாரும் அரசாங்கத்துடனான சந்திப்பின்போது கேள்வி எழுப்பவில்லை
எனவும் பௌத்த சாசன பிரதி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்,மற்றும் அச்சுறுத்தல்கள் திட்டமிடப்பட்டவை அல்ல எனவும் இவை போன்ற சம்பவங்கள் அரிதானவை என்றும் தெரிவித்துள்ளார் .நாட்டில் மத முரண்பாடுகள் கிடையாது எனவும் சிறுபான்மை மதத்தினர்மீது தாக்குதல் நடத்தப்படவோ அல்லது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படவோ இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் .-lankamuslim
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயாக்கவினால் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவில்லை மத முரண்பாடுகள் தொடர்பில் யாரும் அரசாங்கத்துடனான சந்திப்பின்போது கேள்வி எழுப்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments