தம்புள்ளை மஸ்ஜிதுக்கு ஆபத்து ..!!
sireku
தம்புள்ளை மஸ்ஜிதுக்கு ஆபத்து ஏற்படலாம் என மஸ்ஜித் நிர்வாகிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை தம்புள்ளை ரஜமகா விகாரையின் விகாராதிபதி சுமங்கள
தம்புள்ளை மஸ்ஜிதுக்கு ஆபத்து ஏற்படலாம் என மஸ்ஜித் நிர்வாகிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை தம்புள்ளை ரஜமகா விகாரையின் விகாராதிபதி சுமங்கள
தேரர் சுமார் 200 பொலிசாருடன் அங்குவந்து பாதை அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளப்போவதாக கூறியதையடுத்து பள்ளியை இலக்கு வைத்து ஏதும் நடக்கலாமென பள்ளி நிர்வாகத்தினர் அச்சம் கொண்டுள்ளனர்.
இதனால் இதனால் பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
இதனால் இதனால் பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
மஸ்ஜிதை ஊடறுத்துச் செல்லும் வீதியை அமைப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இயந்திரங்கள் சகிதம் கூடியிருப்பதாக பள்ளிவாசல் நிருவாக சபைச் செயலாளர் றஊப் தெரிவித்துள்ளார்
வீதி அதிகார சபையினர் பள்ளிவாசல் மலசல கூடங்கள் மற்றும் அங்குள்ள வேறு சில கட்டிடங்களை தகர்க்கவுள்ளதாகவும், ஆனால், பள்ளிவாசலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர்கள் உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார்
அக்குறித்த கட்டிடங்களை தகர்க்க வேண்டாம் என்றும் அதற்கு ஒரு நாள் அவகாசம் தருமாறும் பள்ளி நிருவாகிகள் கோரியுள்ளனர். எனினும் அவர்கள் அது தொடர்பில் பதிலளிக்க வில்லை எனவும் தெரிவிக்கப் படுகிறது.
அதேவேளை தம்புள்ளை பள்ளி பிரதேசத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கைத்தொழில் அபிவிருத்தி வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொலிஸ்மா அதிபர் என்.இலங்கக்கோனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கிறது .
தம்புளை மஸ்ஜித் அகற்றப் படமாட்டாது என ஜனாதிபதி வாக்குறிதி வழங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
0 Comments