sireku


இஸ்லாமியத்தை தழுவிய மற்றுமொரு பிரபலம்!அழகி, சண்டைக்கோழி போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் மோனிகா. இவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்த எல்லா படங்களும் வெற்றி பெற, சோலோ ஹீரோயினாக நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.
தற்போது இவர் படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்த நிலையில், திடீரென்று இன்று காலை இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக அறிவித்தார். மேலும் இனி படங்களில் நடிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ஆன்மீக பற்று காரணமாகவே தான் இஸ்லாத்தை தழுவியுள்ளேன். காதல் கீதல் என்று எதுவும் இல்லை.
இனிமேல் நான் நடிக்கப் போவதில்லை 2010 லேயே தான் இஸ்லாம் மதத்திற்கு மாறிட்டேன். ஆனால்  ஒப்புக் கொண்ட படங்கள் எல்லாம் முடிந்த பிறகு கூறலாம் என்று காத்திருந்தேன். இப்போதுதான் எல்லா படத்தையும் முடித்தேன்.
இனி நான் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை. குழந்தை நட்சத்திரமாக என் சினிமா வாழ்க்கையை தொடங்கிய நான் இதுவரை 70 படங்கள் நடித்து இருக்கிறேன். அதற்க்கு காரணமாக நீங்கள் அனைவரும் இருந்திருக்கிறீர்கள் உங்களை விட்டு பிரிவது பெரும் கஷ்டமாக இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.என்றார்
சமீபத்தில் தான் இசையமைப்பாளர் யுவன் இஸ்லாமிய மதத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது (newsfirst)

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...