sireku

திருகோணமலை வைத்தியசாலையின் வைத்திய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைதிருகோணமலை பொது வைத்தியசாலையில்  நிலவும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு புதிதாக 8 வைத்தியர்களும், 7 தாதியர்களும் இன்று முதல் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், திருகோணமலை வைத்தியசாலையில் சுமார் 100 தாதியர்களுக்கும், 30 – 40 வரையிலான வைத்தியர்களுக்கும்  பற்றாக்குறை நிலவுவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக வெளிநோயாளர் பிரிவுக்கு போதுமான அளவு வைத்தியர்கள் இல்லை எனவும் திகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார் -newsfirst