sireku

மத நிந்தனை செயல்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் வன்மையான கண்டனம்




மதம் மற்றும் நம்பிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் வன்மையாகக் கண்டித்துள்ளது. 

அண்மைக் காலங்களில் இஸ்லாமிய மதத்தை சில பௌத்த பிக்குகள் நிந்தித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது. 

அதுபோன்று புத்தரை, பௌத்தத்தை நிந்திக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ராசிக் என்பவருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் கண்டனம் தெரிவித்துள்ளது. 

மதம், ஒழுக்கம் மற்றும் சிவில் குழுக்களின் உரிமை மீறும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கவுன்ஸில் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

இஸ்லாமியம் அமைதி மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு மதம். எந்தவொரு மதம் குறித்தும் தேவதூஷணஞ் செய்ய முஸ்லீமுக்கு அனுமதி இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது. 

மதக் குழுக்கள் சிலரை இலக்கு வைத்து ஆத்திரமூட்டும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் கோரியுள்ளது. 

எந்தவொரு மதத்திற்கும் பாரபட்சமின்றி, அதிகார பயமின்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் மற்றும் சட்ட அதிகாரிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் கேட்டுக் கொண்டுள்ளது. 

(அத தெரண )