இலங்கையில் மத தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர்; பாப்பரசர் பிரான்ஸிஸ்..!
sireku
இலங்கையின் மத தீவிரவாதிகள் ஒரு மத அடையாளத்தின் அடிப்படையிலான தேசிய ஒற்றுமையை தவறான அர்த்தத்தில் போதித்து வருவதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மத தீவிரவாதிகள் ஒரு மத அடையாளத்தின் அடிப்படையிலான தேசிய ஒற்றுமையை தவறான அர்த்தத்தில் போதித்து வருவதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அச்சுறுத்தல் மற்றும் வன்முறை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தீவிரவாதிகள் அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த அழுத்தங்கள் சர்வமத ரீதியான உறவுகளுக்கு அச்சுறுத்தல் என்றாலும் இலங்கையில் தேவாலயங்களில் உரையாடல் மூலமான சமாதான பங்களிப்பு முயற்சிகளில் உறுதியாக இருக்க வேண்டும்.
அச்சுறுத்தலான சட்டங்கள் கத்தோலிக்க சமூகத்தை பாதிக்கும். எனவே அதற்கு தேவையான நம்பிக்கையை மக்கள் மத்தியில் இன்னும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பாப்பரசர் கூறியுள்ளார்.
வத்திகான் சென்றுள்ள கொழும்பு பேராயர் கதிர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான ஆயர்கள் குழு, பாப்பரசரை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
25 ஆண்டுகளுக்கு மேலான உள்நாட்டு போருக்கு பின்னர், இலங்கை தீவில் நல்லிணக்கம் மற்றும் அது தொடர்பான விடயங்களை ஆயர்கள் ஊக்குவிக்க வேண்டும் எனவும் பாப்பரசர் மேலும் தெரிவித்துள்ளார்
0 Comments