சவுதியில் மர்ஸ் வைரஸ்சினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 163 ஆக அதிகரிப்பு..
sireku
சவுதிஅரேபியாவில் தற்போது இந்த காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மேர்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 520 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
ஒட்டகங்கள் மூலம் பரவும் இந்த ஆட்கொல்லி நோய்க்கான வைரஸ் கிருமிகள் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் கண்டறியப்பட்டது.
இவ்வகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் நுரையீரல் ஒவ்வாமை மற்றும் சிறுநீரக செயல் இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது ( newsfirst)
0 Comments