sireku

கந்தளாய் - சேறுநுவர வீதியில் பித்தாறு பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். 

சேறுநுவர பகுதியில் இருந்து தம்பலகாமம் பகுதி ஆடை தொழிற்சாலைக்கு பெண் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இன்று (07) காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து சேறுநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்