sireku

 jvp_srilankaபொதுபல சேனாவின் அராஜக  நடவடிகைகளுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிரான வசைமொழிகளுக்கும் எதிரானகவும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) வெளியிட்டுள்ளது  அறிக்கை: பொதுபல சேனா
அமைப்பின் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின்
அரசியல் சபை இன்று (10) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், ஜாதிக பலசேனா அமைப்பு நேற்று (09) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பை பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகள் குழப்பியதை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
பொலிஸார் கூடியிருக்கையில் பிக்குகள் ஒரு தரப்பினரை ஏசி விரட்டுவதும் பிக்கு ஒருவரை அச்சுறுத்தி மன்னிப்பு கோர வைப்பதும் நடைபெற்றுள்ளது. நாட்டின் சமத்துவம் மற்றும் ஜனநாயகம் குறித்து இந்த சம்பவம் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவொரு நபருக்கும் தனது கருத்தை ஊடகங்களுக்கு வெளியிட உரிமை உள்ளது. கருத்து வெளியீட்டு சுதந்திரம் அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பு இடத்திற்கு பலாத்காரமாகச் சென்று அதனை பொதுபல சேனா தடுத்து நிறுத்தியமை பிழையான முன்னுதாரணமாகும்.
பொதுபல சேனா அமைப்பின் இந்நிலை தொடர்ந்தால் நாட்டின் எதிர்கால நிலை குறித்து சொல்ல வேண்டியத் தேவையில்லை. தேசிய ஒருமைப்பாடு குறித்து கதைத்துக் கொண்டிருக்கும் தற்சமயத்தில் இலங்கை பிரஜை ஒருவர் இனவாதம், மதவாதம் பேசுவது கண்டனத்திற்குரியது. பொலிஸார் இருக்கும் போதே பொதுபல சேனா இவ்வாறு நடந்து கொள்வது அவர்களுக்குப் பின்னால் அரசாங்க பலம் இருப்பதை காட்டுகிறதே தவிர வேறொன்றும் இல்லை.
எனவே ஜனநாயகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப முன்வருமாறு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடம் நாம் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (அத தெரண – தமிழ்)

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...