sireku

குர் ஆன் தொடர்பாக தான் வெளியிட்ட கருத்து தொடர்பான பிரச்சினையானது பொலிஸுக்கு செல்லும் வரை காத்திருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆன் குறித்து விவாதிக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கில் இலங்கையின் பௌத்த தர்மம் குறித்து திரிபுபடுத்தப்பட்டு எழுதப்பட்ட புத்தகம் ஒன்று என்னிடம் உள்ளது.  அந்த புத்தகத்தை நாட்டு மக்களுக்கு முன்வைக்க நான் தயாராக இருக்கின்றேன்.

என்னை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.


கிராமம், கிராமமாக சென்று அடிப்படைவாத மதப் பிரசாரங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து நீதிமன்றத்தில் தகவல்களை வெளியிட போவதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...