sireku


ஜெனிவாவில் இலங்கை சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த, அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவினால் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றி தெரிவிக்கும் போது அந்த கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி இதனை கூறியுள்ளார்.

ஜெனிவாவில் இலங்கை சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இலங்கையிடம் தவறில்லை என்றால் அச்சப்பட வேண்டியதில்லை.
ஜனாதிபதி இந்த தீர்மானத்தை நிராகரிப்பார் என்றால், அவருக்கு அதற்கான இயலுமை இருக்கக் கூடும்.

நவநீதம்பிள்ளை என்பவர் தனிநபர் அல்ல. இலங்கையை போல் பல நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகித்து வருகின்றன.
நவநீதம்பிள்ளை அனைத்து நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர். அத்துடன் இந்த தீர்மானம் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அல்ல.

இலங்கையில் உள்ள ஒருசாரார் சம்பந்தமாக மட்டும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். அதில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என அனைவரும் இருக்கக் கூடும்.

விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என இலங்கை கூறுமாயின் இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பில் இருந்து விலக நேரிடும்.
எவராவது ஒரு குற்றத்திற்காக எம்மை குற்றவாளி எனக் கூறுவாராயின், நாம் குற்றவாளியா இல்லை என்பதை மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் தீர்மானிக்க முடியும்.

இதனால் நாம் குற்றவாளியா அல்லது நிராபராதியா என்பதை முடிவு செய்ய இந்த விசாரணையின் பங்கேற்க வேண்டும் எனவும் ஹசன் அலி கூறியுள்ளார்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...