sireku

(A.MOUFAR)

தி/அல்/ஹிஜ்ரா முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி  தி/அல்/ஹிஜ்ரா மகா வித்தியாலத்தின் ஆரம்ப பிரிவு பாடசாலையில்
பாடசாலையின் அதிபர் ப.அப்துல் ரவூப் அவர்களின் தலைமையில் அன்மையில்  நடைபெற்றது.

முயல் ஓட்டம், தவளை ஓட்டம், தாரா ஓட்டம், சமநிலை ஓட்டம், போத்தலில் நீர் நிரப்புதல், கரண்டியில் தேசிக்காய் ஏந்திய ஓட்டம் போன்ற பல்வேறுபட்ட போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

 போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெற்றிக் கேடயங்க ளும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப் பட்டன. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பிரதேசவாசிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...