sireku

கொலராடோ: ஒரு நொடி கூட தவறு இல்லாமல் ஓடும் அணுமின் கடிகாரத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்க அரசின் வர்த்தக துறையின் கீழ் இயங்கும் தேசிய தரம் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் விஞ்ஞானிகள் புதிய அணுமின் கடிகாரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கடிகாரம் 30 கோடி ஆண்டுகளுக்கு ஒரு நொடி கூட தவறு இல்லாமல் துல்லியமாக நேரத்தை காட்டும் என்று தெரிவித்துள்ளனர். தற்போது நவீன யுகத்தில் இணையதளம் மற்றும் கணிப்பொறி வாயிலாக உலகம் முழுவதும் ஒத்திசைவான நேர கணிதம் கடைபிடிக்கப்படுகிறது. 

இதற்காக அணுமின் வகை கடிகாரங்களே பயன்படுத்தப்படுகின்றன. முந்தைய கால கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பெண்டுல கடிகாரத்தில் இருந்து குவார்ட்ஸ், சீசியம் என்ற படிகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அணுமின் கடிகாரங்களின் கண்டுபிடிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து இயற்பியல் நிபுணர் ஸ்டீவன் ஜெப்பர்ட்ஸ் கூறுகையில், இந்த புதிய கடிகாரம் என்ஐஎஸ்டி எப்&2 என்று அழைக்கப்படுகிறது. பழைய படிக வகை கடிகாரங்கள் என்ஐஎஸ்டி எப்&1 என்று அழைக்கப்பட்டன. ஆனால் 2 கடிகாரங்களிலும் சீசியம் அணுவே பயன்படுத்தப்படுகிறது. 

இந்த சீசியம் அணு ஒரு நொடிக்கு 9.1 மில்லியன் அதிர்வுகளை வெளியிடுகிறது. எனவே அவற்றை கொண்டு ஒரு நொடியை கணக்கிடுவதால் மேலும் துல்லியமாக நேரத்தை கணிக்க முடியும். தற்போது கண்டுபிடித்துள்ள கடிகாரம் 3 மடங்கு துல்லியமானது.இதனால் மக்களுக்கு என்ன நன்மை என்று கேட்கலாம். நாளைக்கும் நாம் இருப்போம். நமது கடிகாரம் வழக்கம் போல் ஓடும். ஆனால் முன்பை விட 3 மடங்கு துல்லியமாக இருக்கும். இவ்வாறு ஸ்டீவன் கூறினார்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...