sireku

அமெரிக்காவில் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகளின் உதவியுடன் இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ரோத் தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் இடது காதை நாய் கடித்து குதறியது.
உடனடியாக குறித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்ததும், அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்த பின்னரும், தையல் போட்ட பகுதிக்கு ரத்த ஓட்டம் செல்லவில்லை, இதனை தொடர்ந்து மிக மெல்ல ரத்த குழாய்கள் பொருத்தப்பட்டது.
அதிலிருந்து தையல் போட்ட பகுதிகளுக்கு மட்டும் ரத்த ஓட்டம் சென்றது, உடலின் மற்ற பகுதிக்கு செல்லவில்லை.
எனவே புதுவிதமான ஐடியாவை யோசித்த மருத்துவர்கள் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சிகளை அப்பகுதியில் உலவவிட்டனர்.
பூச்சிகள் ரத்தத்தை உறிஞ்சும் போது உடலின் மற்ற பகுதிகளுக்கு சுலபமாக ரத்தம் பாய்ந்தது.
தொடர்ந்து நிலைமை சீராகவே, பூச்சிகளை நீக்கினர், அட்டை பூச்சிகளின் உதவியுடன் இளம்பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.