யுவனை தொடர்ந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார் நடிகர் ஜெய்?
sireku
 இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவைத் தொடர்ந்து, அவரது நண்பரும் நடிகருமான ஜெய்யும் இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளதாக இந்திய இணையத்தளங்கள் பலவற்றில் செய்தி வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவைத் தொடர்ந்து, அவரது நண்பரும் நடிகருமான ஜெய்யும் இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளதாக இந்திய இணையத்தளங்கள் பலவற்றில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தின் இறுதி வாரத்திலேயே அவர் இஸ்லாம் மதத்தினை தழுவியதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறினார். பின்னர் அதனை அவர் வெளிப்படையாகவே அறிவித்தார்.
இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் ஜெய் தரப்பில் இருந்து இது தொடர்பான அறிவிப்புக்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
‘சுப்பிரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஜெய் தற்போது நஸ்ரியாவுடன் இணைந்து நடித்துள்ள ‘திருமணம் எனும் நிக்கா’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய் இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பதாக கதை அமைந்துள்ளது.
 
 
0 Comments