sireku

(A.MOUFAR)

இன்று காலை 09 மனியளவில் 2014/04/05 முள்ளிப்பொத்தானையில் ’’நபி வழியில் மழை தொழுகை’’ நடைப்பெற்றது.  இதில் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனார்.அல்ஹம்துலில்லாஹ்

தம்பலாகம பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களில் மழை வேண்டி பிரார்த்தனைகள் இடம்பெற்றறு .  தம்பலாகம ஜம்இய்யத்துல் உலாமாவின் பணிப்புரைக்கமையவே இந்த பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

தம்பலாகம பிரதேசத்தில் தற்போது கடும் வரட்சி நிலவுகின்றது. இதனால் நெற் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனையடுத்தே மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபடுமாறு தம்பலாகம ஜம்இய்யத்துல் உலாமா அறிவித்துள்ளது.

தொழுகையின் முடிவில், இறையோனிடம் இரு கரம் ஏந்தியவர்களாய்,தம்பலாகம பிரதேசத்தில்  நிலவி வரும் கடும் வறட்சியை போக்கி மழையை பொழிவிக்க, உருக்கமுடன் பிரார்த்தனை செய்யப்பட்டது.


இதன்போது முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் உள்ள 10ம் கொலனி,புஹாரி நகர்,ஈச்ச நகர் மக்கள் அனைவரும் ஈச்ச நகர் மைதானத்தில் ஒன்டு கூடினர்.

இதன்போது 8ம் கொலனி,4ம் வாய்கல்,ஹிஜ்ரா நகர் மக்கள் அனைவரும் அல்-ஹிஜ்ரா ம.ம.வி மைதானத்தில் ஒன்டு கூடினர்.