உக்ரைனில் ராணுவ தாக்குதல்: 5 ரஷிய ஆதரவாளர்கள் பலி…!!
sireku
ரஷியாவின் அண்டை நாடான உக்ரைனில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து அதிபர் விக்டர் யனுகோவிச் நாட்டை விட்டு வெளியேறி தப்பி ஓடி விட்டார். அதை தொடர்ந்து தன்னாட்சி உரிமை பெற்ற கிரீமியா ரஷியாவுடன் இணைந்தது.
ரஷியாவின் அண்டை நாடான உக்ரைனில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து அதிபர் விக்டர் யனுகோவிச் நாட்டை விட்டு வெளியேறி தப்பி ஓடி விட்டார். அதை தொடர்ந்து தன்னாட்சி உரிமை பெற்ற கிரீமியா ரஷியாவுடன் இணைந்தது.
அதை தொடர்ந்து ரஷிய மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் கிழக்கு உக்ரைன் பகுதி மக்களும் தங்களுக்கும் தன்னாட்சி உரிமை வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிலாவ்யான்ஸ்க் உள்ளிட்ட 2 நகரங்களில் அரசு கட்டிடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே அவர்களை ஒடுக்கும் பணியில் உக்ரைன் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ராணுவம் நடத்திய தாக்குதலில் ரஷிய ஆதரவாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் தீவிரவாதிகள் என்றும்இ அவர்கள் அழிக்கப்பட்டனர் என்றும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. மேலும்இ இந்த தாக்குதலில் ஒருவர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் இந்த நடவடிக்கைக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் ராணுவத்தின் மூலம் இந்நாட்டு அரசு தனது மக்களையே கொன்று குவித்து வருகிறது.
இது மிகப்பெரும் குற்றமாகும். மக்கள் தங்கள் கருத்தை வெளிபடுத்தும் உரிமை உள்ளது. உக்ரைனில் இது போன்ற நடவடிக்கையால் அது கடும் விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் இரு நாட்டிற்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைன் எல்லையில் ரஷியா ராணுவ ஒத்திகை நடத்தி வருகிறது. அதில் குண்டு வீச்சு மற்றும் ராக்கெட் வீச்சு பயிற்சிகளும் நடக்கின்றன. இந்த தகவலை ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி சோயிகு தெரிவித்துள்ளார்.
ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.
அதில் கிழக்கு உக்ரைனில் மக்களை வஞ்சகமாக ஏமாற்றி திசை திருப்பும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டுள்ளது. அங்கு ஸ்திர தன்மையற்ற நிலையை உருவாக்க முயற்சித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
0 Comments