விமானத்தின் சக்கரங்கள் பொருத்துமிடத்தில் 5 மணித்தியாலங்கள் பயணித்த 16 வயது சிறுவன்.
sireku
விமானத்தின் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் (wheel well) கலிபோனியாவிலிருந்து ஹவாய் வரை பயணித்த 16 வயது சிறுவன் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தின் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் (wheel well) கலிபோனியாவிலிருந்து ஹவாய் வரை பயணித்த 16 வயது சிறுவன் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பசுபிக் சமுத்திரத்திற்கு மேலாக சுமார் 38,000 அடி உயரத்தில் குறித்த விமானம் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவன் பயணித்த பகுதியில் சுவாசிப்பதற்கு தேவையான ஒட்சிசன் கூட இருந்திருக்கவில்லை என ஹவாய் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த சிறுவனுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
சிறுவனிடம் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஐந்து மணித்தியாலத்திற்கும் அதிகமாக இவ்வாறு பயணித்த இந்த சிறுவன் உயிர் பிழைத்தமை அதிசயம் எனவும் அமெரிக்க புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.(newsfirst)
0 Comments