sireku
மனித உரிமை செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ ஊடகங்களுடன் பேசுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. 

அண்மையில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று நாள்கள் காவலில் வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ தமது கைது தொடர்பாக ஊடகங்களுடன் பேசுவதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.


பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவைப் பெற்று நேற்று அவரிடம் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.