விமானம் கடலிலே வீழ்ந்தது! விமானத்தில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர்: மலேசியா உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
sireku
சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இந்த விமானம் தென் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்தது என்பது உறுதியாகிவிட்டது. இதில் யாருமே உயிர் தப்பவில்லை என மலேசியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நாங்கள் எங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம் என மலேசியன் எயர்லைன்ஸ் இன்று திங்கட்கிழமை இரவு மலேசிய நேரப்படி 9.45 மணிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதேவேளை விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்களை இன்று மலேசிய நேரப்படி இரவு 10 மணிக்கு சந்தித்த மலேசியப் பிரதமர் கிடைக்கப்பெறுகின்ற புதிய தகவல்களின் படி மேற்படி விமானம் இந்துமா சமுத்திரத்தின் தென்பகுதியில் காணமல் போயுள்ளது என்பதை ஆழ்ந்த கவலையோடு தெரிவிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்
0 Comments