sireku

mawanalai மாவனல்லை நகரின் வீதி ஒன்றின் ஹசன் மாவத்தை என்ற பெயர் பொதுபல சேனா அமைப்பினால் பலவந்தமாக அநகாரிக தர்மபால மாவத்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவனல்லையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகிறது .

 இன்று மாலை மாவனல்லை கடும்போக்கு பொது பல சேனாவின் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . பொலிசார் முன்னிலையில் வீதியின் பெயரை அநகாரிக தர்மபால மாவத்தை என மாற்றினார்   என தெரிவிக்கப் படுகிறது .

 தற்பொழுது குறித்த பிரதேசத்தில் சற்று பதற்ற நிலைமை காணப்படுவதாக அங்கிருத்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகிறது .

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி இரவும் மாவனல்லை ஹசன் மாவத்த பெயர் பலகை அநாகரிக தர்மபால மாவத்த ஆக இனவாதிகளினால் மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை பகிரங்கமாக பொலிசார் பார்த்திருக்க இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப் படுகிறது.

mawanalai.2