sireku

கம்போடியாவில் கல்லறை ஒன்றை தோண்டி பிணத்துடன் உறவுகொள்ள முயன்று தன்னை மறந்து அங்கேயே தூங்கிய நபர் ஒருவர் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.


இளம் பெண் ஒருவர் அடக்கம் செய்த கல்லறை தோண்டப்பட்டு உள்ளிருந்து கால் ஒன்று வெளியே தள்ளி நிற்பதை கண்ட ஊர் மக்கள் அது பற்றி அந்த பெண்ணின் உறவினரிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து கல்லறைக் குள்ளிருந்து 47 வயது சின் சீன் என்ற நபர் சிக்கியுள்ளார்.


அடக்கம் செய்யப்பட்ட 17 வயது பெண்ணின் இறுதிக் கிரியையில் பங்கேற்றுவிட்டு அன்றிரவு 10 மணியளவில் அந்த கல்லறையை தோண்டியதாக சின் சீன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.


‘கம்போடியா டெய்லி’, பத்திரிகை வெளியிட்டிருக்கும் செய்தியில்,

குறித்த நபர் கல்லறையை தோண்டி சவப்பெட்டியையும் திறந்துள்ளார். சவப்பெட்டி சிறிது என்பதால் குறித்த நபரால் பிணத்துடன் உறவுகொள்ள முடியாமல் போன நிலையில் தன்னை மறந்து சவப்பெட்டியிலேயே நித்திரை கொண்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

“அன்று காலை 6 மணி அளவில் கல்லறைக்குள்ளிருந்து சீனின் கால் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதை ஊர் மக்கள் பார்த்துள்ளனர்” என்று பொலிஸ் பிரதானி கியோ வதா குறிப்பிட்டுள்ளார். கம்போடிய தலைநகரில் இருந்து தென்கிழக்காக 103 மைல் தொலைவில் இருக்கும் பிரி பவுன் சமூகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


குறித்த நபருக்கு இறந்த பெண் உயிருடன் இருக்கும் போது அறிமுகமானவரா என்பது பற்றி தற்போதைய நிலையில் எதுவும் தெரியாதுள்ளதாக கியோ வதா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அந்த நபர் போதைப் பொருள் பயன்படுத்தி ஊருக்கு மத்தியில் நிர்வாணமாக ஓடுவது போன்ற அசாதாரண செயலில் ஈடுபடுபவர் என தெரியவந் துள்ளது
.