sireku

டுவிட்டரை அடுத்து யூடியூப் சமூக வலைதளத்திற்கும் துருக்கி அரசாங்கம் தடை விதிப்புடுவிட்டர் சமூக வலைத்தளத்திற்கு தடை விதித்துள்ள துருக்கி அரசாங்கம் தற்போது யூ டியூப் சமூக வலைத்தளத்திற்கும் தடை விதித்துள்ளது.
துருக்கி அரசியல் தலைவர்களின் இரகசிய  கலந்துரையாடல் ஒன்று யூ டியூப் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்மையை கண்டித்தே இந்த தடை விதிக்கப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செயதி வெளியிட்டுள்ளன.
துருக்கிய அரசாங்கத்தினரால் சிரியாவில் இராணு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாளை மறுதினம் துருக்கியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே  தேசிய பாதுகாப்பு மாநாட்டு கலந்துரையாடல் குறித்த  சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
அந்நாட்டு பிரதமர் தொடர்பில் தவறான கருத்துக்கள் வெளியானதாக குற்றஞ்சுமத்தி டுவிட்டர் இணையத்தளத்திற்கு ஏற்கனவே தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.