sireku

முள்ளிப்பொத்தானை கிண்/புஹாரி நகர் மு.வி பாடசாலையின்   வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி  பாடசாலை  அதிபர்  J.சராப்தின் தலைமையில் (2014/03/24)  பாடசாலை மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  கௌரவ சுசந்த புஞ்சிநிலமே,  கௌரவ விருந்தினராக கிண்ணியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ சேகுஅலிதம்பலாகமம் பிரதேசசபை தவிசாளர் கெளரவ எஸ்.சுபியான் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள்  அதிதிகளாக கலந்து கொண்டனர்.



சபா ,மர்வா, மினா, இல்ல மாணவர்களின் விளையாட்டு போட்டிகள், ஒவ்வொரு இல்ல மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி நிகழ்ச்சி  
எனபன நடைபெற்றது. சபா, மர்வா, மினா ,ஆகிய இல்லங்களுக்கிடையில் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளின் இறுதியில் முதலாம் இடம் மினா இல்லமும், இரண்டாம இடம் சபா  இல்லமும் பொற்றுக் கொண்டது.
வெற்றி பெற்ற இல்லங்கள் மாணவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கப்பட்டது. , பாடசாலை அபிவிருத்திக் குழு, பாடசாலை அபிவிருத்திக் குழு அங்கத்தவர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.