பொதுபல சேனாபின் அழைப்பின் பேரில் மியன்மார் விரத்து தேரர் இலங்கை வருகிறார் ?
sireku
‘பௌத்த பயங்கரவாத்தின் முகம்’ என வர்ணிக்கப் படுபம் மியன்மார் தேரர் விரத்து இலங்கையின் கடும்போக்கு பொதுபல சேனா அமைப்பின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அறிவித்துள்ளார் என தகவல்கள் குறிப்பிடுகிறது.
அண்மையில் பொதுபல சேனா அண்மையில் மியன்மார் சென்றிருந்தது. இதன் போது விடுத்த அழைப்பை விரத்து தேரர் ஏற்றுக்கொண்டதுடன், இலங்கைக்கு வருவதை உறுதிப்படுத்தியதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை விட வலுவற்ற நிலையில் இருக்கும் மியன்மார் பௌத்தர்களுடன் இணைந்து உலக பௌத்தர்களை காப்பற்ற தாம் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ன மியன்மார் தேசப்பற்றுள்ள அமைப்பின் தலைவர் சிரத்து தேரர், பௌத்த பயங்கரவாத்தின் முகம் என மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
மியன்மாரில் உள்ள ரொஹின்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு வரும் இந்த அமைப்பினரின் தாக்குதல்கள் காரணமாக நூற்றுகனகான முஸ்லிம்கள் கொல்லப் பட்டுள்ளதுடன் இலட்சகனகான முஸ்லிம்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களின் சொத்துகளும் அழிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் குறிப்பிடுகிறது.
மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைப்புடன் இலங்கையில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினருக்கு எதிராக செயற்படும் பொதுபல சேனா அமைப்பு கைகோர்த்திருப்பது அதன் புதிய பரிமாணமாகும்
0 Comments