sireku



பாகிஸ்தான் அரசுடன் தலிபான் இயக்கத் தலைவர்கள் திங்கள்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இக்கூட்டத்துக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் செüத்ரி நிஷார் அலிகான் தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது.

தலிபான்கள் சார்பில் யூசப் ஷா தலைமையிலான குழுவினர் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என்று தலிபான்  இயக்கத்துக்கு நெருக்கமான அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதையொட்டி ஒரு மாதம் வரை போர் நிறுத்தம் செய்வதாக தலிபான்கள் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அகோரா கட்டாக் நகரில் யூசப் ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், ""தலிபான்கள் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள மதகுரு சமியுல் சவூதி அரேபியா செல்லத் திட்டமிட்டிருந்தார். அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்'' என்று தெரிவித்தார்

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...