sireku                                                                                                                                                                                        
வட்ஸ் அப் (Whats App) நிறுவனத்தை 16 பில்லியன் அமெரிக்க டொலருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளதாக  அறிவித்துள்ளது.
 

மொபைல் ஃபோன் பயன்படுத்துவோர் பலருக்குத் தெரிந்திருக்கும் ஒரு வார்த்தை வட்ஸ் ஆப். குறுந்தகவல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் செயலி (App) தான் இந்த வட்ஸ் அப்.

 
தினமும் கிட்டத்தட்ட 10 இலட்சம் பேர் வட்ஸ் அப் செயலியில் இணைகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 
ஃபோனில் இணைய சேவை இருந்தால் எந்த நாட்டில் இருக்கும் நண்பரையும் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம் என்ற நிலையில், வட்ஸ் அப்பின் புகழ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.
 

வட்ஸ் அப் வெளியான சில வருடங்களுக்கு பின்னரே ஃபேஸ்புக் நிறுவனம், அதன் பயனர்களுக்கான பிரத்தியேக செயலியான ஃபேஸ்புக் மெஸென்ஜரை அறிமுகப்படுத்தியது. 
 

வட்ஸ் அப் -இன் பயனர்கள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது அந்நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது.
 

தொடர்ந்து வட்ஸ் அப் தன்னிச்சையாக செயல்படும் என்றும், அதன் பிராண்ட் மாற்றப்படாது என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 

 
மேலும், வட்ஸ் அப் இணை நிறுவனர் யான் கூம் ஃபேஸ்புக்கின் வாரிய இயக்குநர்களில் ஒருவராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஃபேஸ்புக் மெஸென்ஜரும் தனித்து செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 
நூறு கோடி மக்களை இணைக்கும் பாதையில் வட்ஸ் அப் பயணித்து வருகிறது. அந்த மைல்கல்லை எட்டும் எந்த சேவையும் மதிப்பு வாய்ந்தது என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...