கணினி துறையைவிட்டு விலகுகிறது சோனி நிறுவனம்
sireku
சோனி நிறுவனம் கணினி துறையிலிருந்து விலகுவதாகவும், 5,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் அறிவித்துள்ளது.
ஜப்பான் நிறுவனமான சோனி நிறுவனம் வையோ (Vaio) என்னும் பெயரில் தொடர் மடிக்கணினிகளை வெளியிட்டு வந்தது. இதன் மூலம் சோனி நிறுவனம் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளது.
நஷ்டத்தை சரி செய்யவும், மொபைல், டேப்லட் தயாரிப்பில் கவனம் செலுத்தவும் கணினி துறையை விற்கப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் ஜப்பானில் 1500 ஊழியர்களையும், வெளிநாடுகளில் 3,500 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்வதாகவும் அறிவித்துள்ளது.
0 Comments