sireku


”மசாஜ் சென்டர்” என்ற போர்வையில் 
நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று புறக்கோட்டை பகுதியில் மிரிஹான பொலிஸாரால் இன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பின் போது மூன்று யுவதிகளும், விபச்சார விடுதியின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலன்னநறுவை, எல்பிட்டிய மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.