sireku









இலங்கை வர்த்தமானி (The Sri Lanka Gazzette) அல்லது அரசவர்த்தமானி  எனவும் சாதாரண மக்களினால் கசெட் அல்லது கெசட் என்றவாறு அழைக்கப்படும் வர்த்தமானப் பத்திரிகை இலங்கை அரசினால் அரச வேலைகளுக்காக   பயன்படும் ஓர் அரச பத்திரிகை ஆகும். 



இதன் முதலாவது பதிப்பானதுமார்ச் 15, 1802 இல் வெளியிடப்பட்டதுடன் இது 1972 ஆம் ஆண்டு மே வரை வெளிவந்து 15011 ஆவது பதிப்புடன் இடைநிறுத்தப்பட்டது. 

பின்னர் 1978 ஆம் ஆண்டில் மீண்டும் 1 ஆவது இலக்கத்துடன் மீள் ஆரம்பிக்கபட்டது இது சிங்களம்,தமிழ்,ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் வெளிவருகின்றது. 

பொதுவாக வாரம் ஒரு முறை (வெள்ளிக்கிழமை) வெளிவரும் இது சில விசேட சந்தர்ப்பங்களில் மேலதிக பதிப்புக்களும் வெளிவருகின்றன. 

இப் பத்திரிகையினை இலங்கையில் உள்ள எல்லாப் பிரதான, உப அஞ்சல் (தபால்) அலுவலகங்களிலும்,பொது நூலகங்களிலும் இதைப் பார்க்கக்கூடியதாக இருப்பதோடு  இணையத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப் பத்திரிகை வெளிவரும் அறிவிப்புக்கள் சட்டத்தன்மை கொண்டவைகளாகும்,

இப் பத்திரிகையினை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யாது இலகுவாக பார்வையிட சிலருக்கு தெறிந்தாலும் பலருக்கு தெறியாது ,தெறியாத நண்பர்களுக்காக இப்பதிவு உதவும் என நினைக்கின்றேன்.


இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யாது பார்வையிட The Sri Lanka Gazzette ) அழுத்தவும், பின்பு 5 வினாடி காத்திருங்கள்,பின்பு SKIP AID  அழுத்தி பத்திரிகையை பார்வையிடுங்கள்,



இது சிங்களம்,தமிழ்,ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் இருக்கும் உங்களுக்கு விருப்பமான மொழியினை தெரிவு செய்து பார்வையிடமுடியும்