sireku
பெஷாவர்,
தலீபான்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சமீபத்தில் 4 உறுப்பினர் கொண்ட தூதுக்குழுவை அமைத்தார். அதில் மூத்த பத்திரிகையாளர்கள் இர்பான் சித்திக், ரஹிமுல்லா யூசுப், முன்னாள் தூதர் ரூஸ்தன் ஷா முகமது, முன்னாள் உளவுத்துறை அதிகாரி முகமது அமீர் சத்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அதுபோல பிரதமரின் அழைப்பை தெஹ்ரீக்–இ–தலீபான் அமைப்பும் வரவேற்று ஒரு கமிட்டியை அமைத்துள்ளது. நவாஸ் ஷெரீப் 4 உறுப்பினர்களை கொண்ட தூதுக்குழுவினருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது தலீபான்களுடன் பேச்சுவார்த்தையை உடனே தொடங்குங்கள். அதில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவர்களுக்கு தேவையான தகவல்கள், உதவிகளை கொடுக்க உள்துறை மந்திரி சவுத்திரி நிசார் அலிகானுக்கும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் பிரதமர் அமைத்துள்ள அமைதி பேச்சுவார்த்தை குழுவில் கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு வந்த இம்ரான் கானும் இடம்பெற வேண்டும் என்று தடை செய்யப்பட்ட தலீபான் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தலீபான் இயக்கம், இம்ரான்கான் அந்நாட்டின் மதகுரு சாமியல் ஹக் உள்பட 9 பேர்கள் குழுவில் இடம் வேண்டும் என்றும் நாங்கள் 9 பேர் பேர்கள் கொண்ட குழுவை நியமித்துவிட்டோம் என்றும் அறிவித்துள்ளது.
தலீபான் அமைப்பு, அரசு சார்பில் இடம் பெறும் குழுவில் அப்தூல் அஷிஸ் என்வரும் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஆனால் அவர் பேர்ச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மறுத்துள்ளார் என்று மீடியாக்கள் தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு அப்தூலிடம் முன்னாள் ஐ.எஸ்.ஐ. அதிகாரி அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் மதகுருவும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடக்க இறைவனிடம் பிராத்திப்பதாகவும், ஆனால் குழுவில் இடம் பெற முடியாது என்றும் கூறியுள்ளார்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...