sireku


தம்பலாகமம் பிரதேசத்தில்  பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படடுள்ளது .


 இம் முறை தம்பலாகமம் பகுதியில் குறைவான மழையே பெய்தது. மழையை நம்பி விவசாயம் செய்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

அதிகமான விவசாயிகள் தங்கள் திடல் நிலங்களிள் மழையை நம்பி விவசாயம் செய்தவர்கள் .


தண்ணீர் இல்லாமல் வாடும் நிலையிலுள்ள பயிர்களை காப்பாற்ற, மேகங்கள் இருண்டும், மழை பொழியாமல் கண்ணாமூச்சி காட்டியதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.



போதிய மழை பெய்யாததால் பூமி வறண்டு விட்டது ,வேளம்மை பயிர்கள் பூ வந்த நிலையிலும் நெல் வந்த நிலையிலும் காய்ந்து வாடி போய்விட்டன.



முள்ளிப்பொத்தானை, ஈச்ச நகர் ,புஹாரி நகர், சிறாஜ் நகர், ஹமிதியா நகர்.....முதலிய இன்னும் பல பகுதிகள் சரிவர மழை பெய்யாததால் பாதிக்கப் பட்டுள்ளன.


தம்பலாகமம் பிரதேச சபையின் அனர்த்த முகாமைத்துவ குழு  இது தொடர்பில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய உதவிகளை செய்யுமாறும் வேண்டுகோள் விடுப்பது தம்பலாகமம் பிரதேச சபையின் தவிசாளர் கெளரவ எஸ்.எம் சுபியான் அவர்களே  இது உங்கள் கடமையல்லவா ?
.