sireku

Qatar kingஇஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்துக்கு ஆதரவு வழங்குவதை கட்டார் நிறுத்தாவிட்டால் கட்டாருடனான தனது எல்லைகளையும் வான்பரப்பையும் மூடப் போவதாக சவுதி அரேபியா கட்டார் நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக அல்-அரப் நாளிதழ்  செய்தி வெளியிட்டுள்ளது.


லண்டன் நகரில் வெளியிடப்படும் இந்நாளிதழ், சவுதி அரேபியாவினதும் ஐக்கிய அரபு இராச்சியத்தினதும் ஆட்சியாளர்களுடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது. சவுதி அரசாங்கத்தின் அவசரச் செய்தியொன்றை சவுதி அரேபிய அதிகாரியொருவர் கட்டார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹம்மாத் அல்ஸானியிடம் ஒப்படைத்ததாக அப்பத்திரிகை கூறுகின்றது. சவுதி அரேபியா கட்டாருடனான தனது உறவுகளை மீளாய்வு செய்து வருகின்றது என்ற "எச்சரிக்கை" அச்செய்தியில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது இரு தரப்புக்கும் இடையிலான உறவுகளை முடக்கி விடும் ஒரு முக்கியமான மாற்றமாக அமைய முடியும்

.
இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்துக்கு ஆதரவு வழங்குதல், வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் வழிகாட்டல்களை மீறுதல் என்பன  தொடர்பில் குறிப்பாக எகிப்து விடயத்தில் கட்டார் கடைப்பிடிக்கும் கொள்கைகள் விடயத்தில் தான் பொறுமை இழந்து வருவதாக சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.


இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரியாத் நகரில் நடைபெற்ற மாநாடொன்றின் போது, சவுதி அரேபியாவுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் செயற்பாடுகள் கட்டார் மண்ணில் மேற்கொள்ளப்படுவதைத் தடுத்துநிறுத்துவதற்காகக்  குவைத் நாட்டு அமீரின் முன்னிலையில் கட்டார் நாட்டின் அமீர், கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை மதித்து நடக்கத் தவறியுள்ளார் என சவுதி அரேபியா நம்புகின்றது
.
.
தனது அயல் நாடான கட்டார்  யெமனிலுள்ள ஹவுதீஸ் இயக்கத்துக்கு  கட்டார் அரச குடும்பத்தின் ஷேக் ஒருவரின் ஊடாக பணமும் ஆயுதங்களும் வழங்கி வருகிறது எனவும் சவுதி அரேபியாவிலுள்ள இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்துக்கு உதவி வழங்குகின்றது எனவும் சவுதி அரேபியா கட்டார் நாட்டின் மீது குற்றஞ்சாட்டுகின்றது.


சவுதியின் இந்த எச்சரிக்கை எகிப்தின் வெளிநாட்டு அமைச்சர் நபீல் பஹ்மியின் விடுத்திருந்த எச்சரிக்கயை ஒத்ததாக அமைந்துள்ளது. " கட்டாரின் நிலைப்பாட்டை அதன் வடிவம், அதன் உள்ளடக்கம் அடங்கலாக முழுமையாக நாம் நிராகரிக்கின்றோம். எகிப்தின் உள்விவகாரங்களில் எந்தவொரு தலையீடும் இருக்கக் கூடாது"  என நபீல் பஹ்மி  தெரிவித்திருந்தார்.


கட்டாருடனான எல்லையை மூடிவிடப் போவதாக சவுதி அரேபியா விடுத்துள்ள எச்சரிக்கையானதுமுழு கட்டார் நாட்டையும் கட்டுப்படுத்துவதாகவே அமையும். 

கட்டார் வெளி உலகுடன் தரைமார்க்கமாகத் தொடர்புகொள்வதற்கு உள்ள ஒரே வழி சவுதி அரேபியாவின் துறைமுகமாகும். அத்துடன் சவுதி அரேபியாவின் வான் பரப்பைப் பயன்படுத்துவதிலிருந்தும் தடுக்கப் போவதாகவும் கட்டார் எயார்வேஸ் நிறுவனம் சவுதி அரேபிய நகரங்களுக்கிடையில் மேற்கொண்டு வரும் விமானப் போக்குவரத்து சேவைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யப் போவதாகவும் சவுதி  அரேபியா எச்சரித்துள்ளது.


சவுதி அரசாங்கம் கட்டாருக்க எதிராக எடுக்கப்  போகும் நடவடிக்கைகள் பற்றி வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு விளக்கிக் கூறுவதற்காக சவுதி அரேபியாவின் இராஜாங்கச் செயலாளர் முஸாஇத் அல் அய்பன் அவர்கள்  வளைகுடா நாடுகளின் தலைநகரங்களுக்குப் பல தடவைகள் பயணம்செய்ததாக அல்-அரப் பத்திரிகை கூறுகின்றது.


1996 ஆம் ஆண்டில் கட்டாரில் மேற்கொள்ளப்பட்ட சதிமுயற்சிக்கு சவுதி அரேபியாவும் எகிப்தும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கட்டாரின் முன்னாள் அமீருக்குச் சார்பான படையினர் எகிப்திய மற்றும் சவுதி அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கட்டாருக்குள் நுழைந்து ஹம்மாத் பின் கலீபாவைக் பதவியிலிருந்து கவிழ்த்து அவருடைய தந்தையான ஷேக் கலீபாவை ஆட்சிபீடமேற்றுவதற்கு முயற்சி செய்தன.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...