sireku

திருகோணமலையில் பண்டைய துறைமுகம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

8ம் நூற்றாண்டு காலத்தில் இந்த துறைமுகம் அமைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 
இலங்கை அகழ்வாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் குறித்த துறைமுகத்தை கண்டு பிடித்துள்ளனர்.

சேருவில பிரதேசத்தில் சர்வதேச துறைமுகம் ஒன்று இயங்கி வந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என களனி பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சி பீட பொறுப்பாளர் டொக்டர் அனுர தந்திலகே இதனைத் தெரிவித்துள்ளார்.
சீன பீங்கான் பொருட்கள், வெளிநாட்டுக் கண்ணாடிகள், செப்பு தகடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த இடம் தொடர்பிலான ஆய்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்