sireku
மேல் மாகாண முதலமைச்சர் சம்பந்தமான இரகசியத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று வெளியிட்டுள்ளார்.
மினுவங்கொட - ஹோரம்பெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்கவை மீண்டும் மேல் மாகாண முதலமைச்சராக ஜனாதிபதி ஏற்கனவே தீர்மானித்து விட்டதாக கூறியுள்ளார்.


வெயங்கொடவில் மேம்பாலத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரசன்ன ரணதுங்கவிடம் இதனை தெரியப்படுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் கொள்கைகளை மீறி ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், கட்சியின் கொள்கைகளை மீற வேண்டிய அவசியமில்லை எனவும் தன்னால் மக்களின் அதிகளவான விருப்பு வாக்குகளை பெற முடியும் என முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க அந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் கூறியதாக அமைச்சர் பசில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியும், பிரசன்ன ரணதுங்கவும் தானும் அறிந்து வைத்திருந்த இந்த இரகசியத்தை தற்பொழுது முழு நாடு அறிந்து கொண்டு விட்டதாகவும் அமைசச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.